நடப்பு ஆண்டு 10 இருநாடுகளுக்கிடையிலான தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

நடப்பு ஆண்டு 10 இருநாடுகளுக்கிடையிலான தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

நடப்பு ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 10 இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாடவுள்ளது.

இதன்படி, 9 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 39 ரி-20 போட்டிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் எஹ்சான் மானி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இதில் அடங்காது.

நியூஸிலாந்து அணி, உலக கிரிக்கெட் தொடருக்கு முன் பாகிஸ்தான் செல்கிறது. அதன்பின் இங்கிலாந்து இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்குது.

ஆசிரியர் - Editor II