இரண்டாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி: இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதல்

இரண்டாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி: இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதல்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தென்னாபிரிக்கா சென்றிருந்த இலங்கை அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தீல்வியை பதிவு செய்தது.

அத்தோடு குறித்த போட்டியில் பல இலங்கை அணி வீரர்கள் உபாதை அடைந்தமையால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் திமுத் கருணாரத்ன தலைமையில் குசல் பெரேரா, லஹிரு திரிமன்னே, குசால் மெண்டிஸ், மினோத் பானுக, டிக்வெல்ல, ஷானக, ஹசரங்க, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, விஸ்வ பெர்னாண்டோ ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வலுவான நிலையில் உள்ள தென்னாபிரிக்க அணியில் ஒரு சில மாற்றங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி டி கொக் தலைமையில் டீன் எல்கர், மார்க்ரம், வன் டெர் டசன், டு பிளெசிஸ், பவுமா, வியான் முல்டர், கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, சிபாம்லா, லுங்கி இன்கிடி அகியோருடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கவுள்ளது.

ஆசிரியர் - Editor II