இப்படி அவரை நான் பார்த்ததே இல்லை! ப்ரீத்தி அஷ்வின் பகிர்ந்த சீக்ரெட் என்ன தெரியுமா?

இப்படி அவரை நான் பார்த்ததே இல்லை! ப்ரீத்தி அஷ்வின் பகிர்ந்த சீக்ரெட் என்ன தெரியுமா?

அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் விட்டு சென்ற பணியை செவ்வனே தனது பந்துவீச்சு வாயிலாக தொடர்ந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். என்ன தான் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும், தேர்வாளர்கள் சர்வதேச டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அஸ்வினை ஓரம் கட்டிவிட்டனர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்கிறார்.

கடந்த சில பல வருடங்களாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அஸ்வின் சுமாராக தான் பந்துவீசுகிறார் என்ற கருத்து கிரிக்கெட் ஆலோசகர்கள் மத்தியில் உண்டு. கடந்த சில தொடர்களாகவே காயமும் ஏற்பட அஸ்வின் தன் திறனை முழுவதும் நிரூபிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது.

இந்நிலையில் அஷ்வின் இரண்டாவது டெஸ்ட் முடிந்த பின்பு டீம் நபர்களுடன் இருக்கும் போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டார். சிறப்பான வெற்றி எனவும் பதிவிட்டார். இந்த டீவிட்டுக்கு அஷ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் பதில் தட்டியுள்ளார்.


ஒவ்வொரு டெஸ்ட் மேட்ச் முடிந்த பின்பும் நான் அஷ்வினிடம் பேசியுள்ளேன், அதில் பல வெற்றி பெற்ற மேட்சுகளும் உண்டு. ஆனால் கிட்டத்தட்ட சுமார் 10 வருடங்களில் இந்தளவுக்கு மகிழ்ச்சியாக, மனநிறைவாக, பிரகாசமாக அவர் கண்களை நான் பார்த்ததில்லை.” என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் அஸ்வின் ப்ரோ. தொடர் நாயகன் விருதுடன் நாடு திரும்புவதற்கு.

ஆசிரியர் - Editor II