இந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் தாமதமாக இதுதான் காரணம்

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் தாமதமாக இதுதான் காரணம்

வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அம்சம் தாமதமாக இது தான் காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் தாமதமாக இதுதான் காரணம்
வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் எனப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி பீட்டா முறையில் குறிப்பிட்ட வாடிக்கைாயளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். 
உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்பத்துகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள செயலியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய நடையில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அனைவருக்கும் வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் எழுப்பப்பட்டு இருக்கும் சந்தேகங்களுக்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பதில் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்ய தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற மையத்தை (UPI) வழங்குகிறது. புதிய யுபிஐ சார்ந்த சேவை ஆர்.பி.ஐ நிர்ணயித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறதா என்ற வகையில் மத்திய தொழில்நுட்ப துறை சந்தேகங்கள் அமைந்திருக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அனுமதியை தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் (NPCI) எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை ஆர்.பி.ஐ. விதிகளுக்கு உட்படும் வகையில் இருக்கிறதா என்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை.

முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்ப் பேமென்ட்ஸ் அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான வங்கி சப்போர்ட் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் - Shabesh