வன்முறை ஒருபோதும் வெற்றிபெறாது: நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் குறித்து ட்ரூடோ கருத்து!

வன்முறை ஒருபோதும் வெற்றிபெறாது: நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் குறித்து ட்ரூடோ கருத்து!

ட்ரம்ப் ஆதரவாளர்களால் தொடுக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் குறித்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எங்கள் நெருங்கிய நட்பு நாடும், அண்டை நாடுமான அமெரிக்காவில் ஜனநாயகம் மீதான தாக்குதலால் கனடா மாக்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர்.

மக்களின் விருப்பத்தை மீறி வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II