கனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!

கனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!

தியாக தீபம் லெப்டினண்ட் கேணல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) சகோதரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்து யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்ததுடன் இந்திய அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் தியாகி திலீபன்.

இவரது சகோதரரான இராசையா அசோகன் கனடாவில் வசித்துவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தார்.

அங்கு நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக அசோகன் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

ஆசிரியர் - Editor II