பொடுகை நிரந்தரமாக விரட்டி முடியை கிடு கிடுனு வளர செய்யும் நாட்டுக்கோழி முட்டை!

பொடுகை நிரந்தரமாக விரட்டி முடியை கிடு கிடுனு வளர செய்யும் நாட்டுக்கோழி முட்டை!

கூந்தல் வளர்ச்சியில் பொடுகும் தவிர்க்க முடியாதது தான். பொடுகு இயற்கையாகவே வரக்கூடியது என்றாலும் சரியான முறையில் கூந்தலை பராமரிக்கும் போது அது தானாகவே சரியாகவும் கூடும்.

அவ்வபோது பொடுகு எட்டிப்பார்ப்பதும் பிறகு குறைவதும் இயல்பானது. ஆனால் எல்லா காலங்களிலும் பொடுகு கூந்தலில் ஒட்டி இருந்தால் அது கூந்தலின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் பாதிக்க கூடும்.

கூந்தல் வளர்ச்சியில் அதிக பாதிப்பை உண்டாக்குவது பொடுகு பிரச்சனை தான் இதற்கு நாட்டுக்கோழி முட்டை வைத்தியம் சிறந்த பலனளிக்கும்.

பொடுகு போக்க வைத்தியம்தேவையான பொருட்கள்

  1. சாம்பார் வெங்காயம் – 10
  2. நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு – 1 அல்லது 2 ( கூந்தலின் அடர்த்திக்கேற்ப)
  • வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். நீர் விடாமல் எடுக்க வேண்டும். நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இரண்டும் நன்றாக கலந்து நுரைத்து சேரும் வரை கலக்கவும். அல்லது மிக்ஸியிலேயே அடித்து நுரைக்க வரும் வரை எடுக்கவும். இது ஷாம்பு போன்று இருக்கும். இதை கூந்தலில் தேய்க்க வேண்டும்.
  • ​கூந்தலை சிக்கில்லாமல் சீவி கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம்.
  • கைகளில் கிளவுஸ் அணிந்து கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து ஸ்கால்ப் முழுக்க தடவி விடவும்.
  • கூந்தலின் மேலும் தடவலாம். நாட்டுக்கோழி முட்டை அதிகமான வாடையை உண்டாக்கும் என்பதால் இதை தலையில் தேய்த்து கையோடு ஹேர் கவர் போட வேண்டும். இது எவ்வளவுக்கெவ்வளவு உலர்வாக ஆகும் வரை காயவிடுகிறோமோ அவ்வளவு நல்லது. இரண்டு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  • வெங்காய்ச்சாறும், நாட்டுக்கோழி முட்டையும் பயன்படுத்தும் போது பொடுகு நிரந்தரமாக போகும். ஆனால் சரியான முறையில் இதை பயன்படுத்த வேண்டும். பொடுகு அதிகம் இருப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வரை இதை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறப்பாக உதவக்கூடிய பேக் இது என்பதால் இயற்கையை விரும்புபவர்கள் பொடுகுக்கு இந்த பேக் பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இரண்டு மாதங்கள் இதை செய்தால் பொடுகு நிரந்தரமாக போகும். கூடுதலாக கூந்தலின் மயிர்க்கால்களுக்கு நல்ல ஊட்டமும் வளர்ச்சியும் கிடைத்து கூந்தல் பொலிவாகவும் இருக்கும்.

ஆசிரியர் - Editor II