தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, சிவானந்தபுரம், மூஞ்சூர்பட்டு, புலிமேடு, அரியூர் உள்ளிட்ட 25 இடங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் தெற்கு தமறாக்கி கிராமத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆசிரியர் - Editor II