நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா!

நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராய் லட்சுமி தனது  இன்ஸ்டாகிராம் பதிவில், “ காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II