இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் பாதுகாப்பு குறித்து இலங்கை-மாலைதீவு கரிசனை!

கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில், மாளிகாவத்தையில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்து சமுத்திரத்திற்கு அப்பாற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பாரிய மீன்பிடிக் கலன்களினால் இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாக இலங்கையின் நிலைப்பாட்டை மாலைதீவு தூதுவர் வெளிப்படுத்தினார்.
இதன்போது, கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பாக இலங்கையும் கரிசனை கொண்டிருப்பதாகவுத் இந்து சமுத்திர நாடுகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து பொதுவான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
அத்துடன், இந்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடற்றொழில் மற்றும் பருவகால – நன்னீர் மீன்பிடிகளில் செயற்பாடுகளில் அனுபவங்களையும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பயிற்சிச் செயற்பாடுளை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.