லண்டனில் தமிழர்களின் இக்கட்டான நிலை தொடர்பில் வெளியான தகவல்!

லண்டனில் தமிழர்களின் இக்கட்டான நிலை தொடர்பில் வெளியான தகவல்!

இங்கிலாந்து லண்டனில் உள்ள லூட்டன் பகுதியில் தமிழர் வணிக நிலையங்களை குறிவைத்து அண்மைக்காலகாக மர்மநபர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று அங்குள்ள தமிழ் கடையொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த பெண்ணை மிரட்டி அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி அங்குள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் தமது கடைக்காக பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்ய சென்றபோது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தையும் முக்கியமான சில ஆவணங்களையும் பறித்து சென்றுள்ள சம்பவம் ஒன்றும் கடந்த புதனன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வரும் நிலையில் தமிழர் வணிக வளாகங்களை குறிவைத்து இடம்பெறும் இவ்வாறான தொடர் கொள்ளைகள் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II