வாட்ஸ் அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வாட்ஸ் அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வாட்ஸ் அப் (WhatsApp)செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்(WhatsApp) செயலியில் தனியுரிமை முழுமையாக வெளிப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II