ஜெர்மன் விமான நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

ஜெர்மன் விமான நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

ஜெர்மன் – பிராங்க்பிரட் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அந்நாட்டு நேரப்படி மாலை 5.16 மணியளவில் பெட்டியுடன் வந்த நபரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித் நபர் முகக்கவசம் அணியாததால் அவரை தடுத்து நிறுத்திய பொலிஸார் முகக்கவசம் அணிந்துவிட்டு வரும்படி கூறினர்.

அப்போது அந்த நபர் பொலிஸாரை நோக்கி, ‘நான் உன்னை கொன்றுவிடுவேன், அல்லாஹு அக்பர் (கடவுளே சிறந்தவன்)’ என கூறிக்கொண்டு தனது கையில் வைத்திருந்த பெட்டியை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றான்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலிஸார் துப்பாக்கி முனையில் அந்த நபரை சுற்றிவளைத்தனர். மேலும், அந்த நபர் கொண்டுவந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என சந்தேகம் எழுந்ததுள்ள வெடிகுண்டு நிபுணர்கள் வரவலைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அந்த பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

இந்த பரபரப்பு சம்பவங்களால் பிராங்க்பிரட் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அனைத்து விமான போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானநிலையம் மூடப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II