ராஜபக்ச குடும்பத்திலும் ஊடுருவிய கொரோனா-உண்மை என்ன?

ராஜபக்ச குடும்பத்திலும் ஊடுருவிய கொரோனா-உண்மை என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டவுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப வார இறுதிப் பத்திரிகையில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், அதே பத்திரிகை இன்று அந்தச் செய்தியை திருத்தி பிரசுரித்துள்ளது.

அதற்கமைய பிரதமர் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொண்ட நிகழ்வொன்றில், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அண்மையில் கலந்துக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II