அவகோடா பழத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?

அவகோடா பழத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?

அவகோடாவை ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப் பழம், வெண்ணெய் பேரி, பட்டர் ப்ருட் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதுமட்டுமின்றி பல நோய்களை வேரோடு அழிக்க அந்த பழம் உதவி புரிகின்றது.

பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

  • சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.
  • உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது.
  • செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது.
  • கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்க செய்து உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
  • இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
  • இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன,
  • புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.
  • ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.
  • அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் எலும்புகள் வலிமையடைகின்றன.
  • கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தல் சிறுநீரக பிரச்சினைக்கு உடனடி நிவராணம் தரும்.
ஆசிரியர் - Shabesh