ரம்யாவுக்காக சோம் வெளியிட்ட பதிவு; என்ன வசனம் கூறி பதிவிட்டுள்ளார் தெரியுமா?

ரம்யாவுக்காக சோம் வெளியிட்ட பதிவு; என்ன வசனம் கூறி பதிவிட்டுள்ளார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் விரும்பதக்கவராக இருந்தவர் தான் சோம் சேகர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது அவர் ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேட்டை வைத்திருந்ததற்காக அவரது நண்பர்கள் அவரை செல்லமாக கிண்டல் செய்து வந்தனர். மேலும் இந்த விடயம் நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் நேரடியாகவே இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஐந்தாம் இடத்தை பிடித்து வெளியேறினார்.

மேலும் அறிமுகம் இல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவர் பைனல்ஸ வரை வந்தது மிகவும் பெரிய விடயம் என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வந்தனர். அதுவும் டிக்கெட் டு பினாலேவில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து முதலிடத்தை பிடித்து நேரடியாக பைனல்ஸ் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்ட்டாகிராமில் பிக்பாஸ் நண்பர்களுடன் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக ரம்யா பாண்டியனும் அவரும் அந்த சாக்லேட்டும் இருப்பதுபோல கார்ட்டூன் ஒன்றையும், பின்பு ஒருமுறை அவர் ரம்யாவிடம் “கடலை அதான் போட முடியலை சுண்டலாவது போடு” என்று கூறிய அந்த வாசகம் அடங்கிய ஒரு கார்ட்டூனையும் அவர் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II