ஹெலிகாப்டர் மூலம் தப்பிய குற்றவாளி: பிரான்சில் பரபரப்பு

ஹெலிகாப்டர் மூலம் தப்பிய குற்றவாளி: பிரான்சில் பரபரப்பு

Redoine Faid, 46 எனும் குற்றவாளி Reau சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய சம்பவம் இப்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிசின் பிரபல சிறையில் இருந்து பிரான்சால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த Redoine Faid எனும் குற்றவாளி நிமிட நேரத்திற்குள் ஹெலிகாப்டர் மூலம் தப்பியது அங்குள்ள பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது Redoine Faid இரண்டாவது முறையாக சிறையிலிருந்து தப்பிக்க செய்த முயற்சியாகும். ஏற்கனவே ஒருமுறை இது போல நடந்து பின் மாட்டியிருக்கிறான்.

2010 மே மாதம் நடந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டிருக்கிறான் Redoine Faid. இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் Redoine Faid ற்கு 25 ஆண்டு கால சிறை விதிக்கப்பட்டது

சம்பவம் நடந்த போது பார்வையாளர் அறையில் Redoine Faid பார்வையாளருக்கு காத்திருப்பது போல காத்திருந்தான். அப்போது ஆயுதம் ஏந்திய மூவர் திடீரென ஹெலிகாப்டரில் அங்கு வந்து இறங்கினர். அவர்கள் தோளில் காவல்துறையினர் அணிந்திருக்கும் பேட்ஜ் அணியப்பட்டிருந்தது.

மேலும் Redoine Faid விடுவிக்க சொல்லி மிரட்டினர். அதன் மூலம் ஏற்பட்ட போலீசின் குழப்பத்தை பயன்படுத்தி கொண்ட குற்றவாளி வந்தவர்களுடன் ஹெலிகாப்டரில் தப்பினான்.

உடனடியாக சுதாரித்து போலீசார் ஹெலிகாப்டர் சென்ற இடம் நோக்கி தேடியபோது சிறையில் இருந்து 37மைல் தொலைவில் ஹெலிகாப்டர் இருந்துள்ளது.

ஹெலிகாப்டர் ஓட்டும் பைலட்டை பணய கைதியாக்கி துப்பாக்கி முனையில் பைலட்டை அமரவைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. அதன்பின் ஹெலிகாப்டரில் இருந்து கறுப்பு ரெனால்ட் காரில் அங்கிருந்து தப்பியதாக பைலட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல்நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றன என்று பாரிஸ் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II