இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; உங்கள் பணம் கவனம்!

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; உங்கள் பணம் கவனம்!

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இம்மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது செல்லிடத்தொலைபேசி செயலி அடிப்படையிலமைந்த இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே நடாத்தப்படுகின்றன. அத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது மோசடிக்காரர்கள் பின்வருவன போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களைப்/ தரவுகளைப் பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றனர்.


ஆசிரியர் - Editor II