நடுச்சாமம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை ஓட்டிய பேய்! வயிற்றுக் கலக்கத்தில் ட்ரைவர்!!

நடுச்சாமம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை ஓட்டிய பேய்! வயிற்றுக் கலக்கத்தில் ட்ரைவர்!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று நள்ளிரவுவேளை தானாக அசைந்து சென்றமை பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மா நிலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை பேய்தான் நிகழ்த்தியதென்று பேருந்தின் சாரதி பரபரப்புடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீடீரென்று தானாக நகர்ந்து சென்றது. மெதுவாக சென்ற அந்த பேருந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள தூணின் மீது மோதி நின்றது.

இந்த காட்சிகள் சி.சி.டி.வி(C.C.T.V) கேமராவில் பதிவாகி இருக்கும் நிலையில் அங்கு பணியாற்றும் வேலையாட்களிடையே கடும் பீதியைக் கிளப்பியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தக் காட்சியை பார்த்த அதிகாரிகள் அது குறித்த விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இது பேருந்திலுள்ள ஏதேனும் கோளறால் நிகழ்ந்திருக்கலாமா என சந்தேகிக்கப்பட்டாலும் கை பிரேக் போட்டபின்பே நிறுத்திச் சென்றதாக இதன் சாரதி கூறுகின்றார்.

ஆசிரியர் - Editor II