மஹிந்தவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதா?

மஹிந்தவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸின் உடல் நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உடல் நிலை, கடுமையாக மோசமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, பிரதமர் ஊடகப் பிரிவு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு , பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II