படிக்கும் ஆசையில் கடன் கேட்டு வந்த மாணவி; வங்கி மேனேஜரின் ஆசைக்கு இரையான கொடூரம்!

படிக்கும் ஆசையில் கடன் கேட்டு வந்த மாணவி; வங்கி மேனேஜரின் ஆசைக்கு இரையான கொடூரம்!

இந்தியாவில் கல்வி கடன் வழங்குவதாக வாக்குறுதியளித்து வங்கி மேலாளர் ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதியில் வசிப்பவர் பர்விந்தர் சிங். 53 வயதாகும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவரது வீட்டில் ஒரு பெண் வேலை செய்துவந்துள்ளார். அவருக்கு ஒரு மக்கள் இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் மகள் கடந்த ஆண்டு தனது தோழி ஒருவரை, தனக்கு இந்த வாங்கி மேலாளர் கல்விக் கடன் பெற்று தந்ததாகவும், அவருக்கும் அவர் கடன் பெற்று தருவார் என கூறி, பவிந்தர் சிங் வீட்டிற்கு கூட்டிவந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்போது அந்த 16 வயதே ஆன அந்த சிறுமியின் மீது அந்த வங்கி மேனேஜர் ஆசைப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் அவருக்கு வங்கியில் கடன் வாங்கி கொடுத்து, உயர் படிப்பு படிக்க வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

படிக்கும் ஆசையில் அந்த பெண் மேலாளரின் ஆசை வார்த்தையில் மயங்கியுள்ளார். அவருடன் சேட் செய்ய தொடங்கிய அந்தப் பெண், அடிக்கடி அவருடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.

சிறுமியின் தேவையையும் நம்பிக்கையையும் பயன்படுத்திக்கொண்ட மேலாளர் ஆகஸ்ட் 2020ல், சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்தக் காட்சிகளை வீடியோவாகப் பதிவுசெய்துக்கொண்டு சிறுமியை பிளாக் மெயில் செய்து வந்துள்ளார்.

பின்னர், அவர் சிறுமியை மிரட்டி கோவாவிற்கு அழைத்து சென்று ஒரு ஹோட்டலில் வைத்து அவரை மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த காட்சிகளையும் வீடியோ படமெடுத்து அவரை பலமுறை பிளாக் மெயில் செய்துவந்துள்ளார்.

இதனால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளான அந்த டீனேஜ் பெண், தனது ஆசிரியர் ஒருவருக்கு கடந்த வாரம் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக மெஸேஜ் அனுப்பியுள்ளார்.

அதை பார்த்த அந்த ஆசிரியர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் இந்த விஷயத்தை கூறி அவரை தற்கொலையிலிருந்து காப்பாற்றினார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வங்கி மேனேஜர் மீது புகாரளித்தனர்.

வழக்கு பதிவு செய்த பொலிஸார் பவிந்தர் சிங்கை இந்தூர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் ஐமுகப்படுத்திய அந்த பெண்ணையம் பொலிஸார் கைது செய்தனர்.

ஆசிரியர் - Editor II