தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்!

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்!

இந்தியாவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கக்கன் நகரை சேர்ந்த சிறுவன் ஒருவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

இரண்டு வயது சிறுவனை காணவில்லை என அப்பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்ததும் உள்ளே தங்கள் மகன் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் தொடர்ந்து பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II