நான் சிவனின் அவதாரம் – தன்னுடைய இருமகள்களையும் நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த கொடுத்த தாய் பகீர் வாக்குமூலம்

நான் சிவனின் அவதாரம் – தன்னுடைய இருமகள்களையும் நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த கொடுத்த தாய் பகீர் வாக்குமூலம்

திருப்பதி அருகே பெற்ற மகள்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தம்பதிகளில் மனைவி மனநோயாளி போல நடிப்பதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்த புருசோத்தம் நாயுடு – பத்மஜா நாயுடு தம்பதியர் தங்களது இரு மகள்களான அலெக்கியா, சாய் திவ்யா ஆகியோரை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரது உடல்களும் 25 ந்தேதி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு போலீசார் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டன.

முன்னதாக விசாரணைக்கு கொலை நடந்த வீட்டுக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து புருஷோத்தம் நாயுடுவின் மனைவி பத்மஜா, காலில் ஷூ அணிந்து கொண்டு தமது பூஜை அறைக்குள் வருகிறார்கள், தடுத்து நிறுத்துங்கள் என்று சுய நினைவுடன் எதிர்த்தார்.

விசாரணைக்கு பின்னர் முதல் குற்றவாளியாக தந்தை புருஷோத்தம் நாயுடுவையும் இரண்டாம் குற்றவாளியாக தாய் பத்மஜாவையும் கொலை வழக்கில் செய்த போலீசார் , இந்த வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெற்ற மகள்களை நரபலியிட்ட கொடூர கொலைகாரியாக காவல்துறையினரால் சுட்டிக்காட்டப்படும் பத்மஜா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பிதற்றினார்.

கொரோனா சோதனையின் போது தன்னை சிவனின் மறு அவதாரம் என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது என்றும் பிதற்றினார்.

முதற்கட்ட விசாரணையில் தெளிவாக இருந்த பத்மஜா உண்மையிலேயே மனநிலை பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? அல்லது நடிக்கிறாரா? என்ற போலீசார் குழப்பம் அடைந்தனர். போலீஸ் வாகனத்தில் ஏறும் போதும் கூச்சலிட்டபடியே அவர் சென்றார்

அலெக்கியா, சாய் திவ்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள புருஷோத்தம நாயுடு, பத்மஜா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதே நேரத்தில் இரு மகள்களையும் வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

ஆசிரியர் - Editor II