ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்

ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்

நம் உடல் இயங்குவதற்கு ரத்தத்தின் தேவை அதிகம், ஆக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களை உடல் முழுதும் கொண்டு செல்லும் பணியை செய்கிறது.

ரத்தம் சுத்தமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

எனவே அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சத்தானதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

  • மஞ்சள் கலந்த பாலுடன், சிறிது மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகினால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும், ஆரோக்கியத்தை காக்கும் டானிக் ஆகும்.
  • தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வர நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும், இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகி வர ரத்தம் சுத்தமாகும்.
  • தொடர்ந்து 40 நாட்கள் அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்து அடைந்து, உடலின் பலன் அதிகரிக்கும்.
  • செம்பருத்தி பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கி விட்டு அதன் இதழ்களை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
  • பச்சை காய்கறிகள், கீரைகள், தேன், சுண்டைக்காய், முழு தானியங்கள், கிவி பழம், கேரட், வெல்லம், முட்டை, ஈரல் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
  • பெக்டின் அதிகம் உள்ள ஆப்பிள், கொய்யா, பிளம், பேரிக்காய் போன்றவை உடலில் இருந்து நச்சுக்களை விரட்டுகிறது. அதிக அளவு கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
ஆசிரியர் - Editor II