பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் பேராபத்து? யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் பேராபத்து? யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?

சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதுவரை நாம் பச்சை மிளகாயின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். எனினும் அதிகம் சாப்பிட்டால் இதனால் ஆபத்தும் உண்டு.

ஆனால் அதன் பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  • பொதுவாக அளவுக்கு அதிகமானால் எப்பேற்பட்டதும் தீங்கை விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிவோம். இது பச்சை மிளகாய்க்கும் பொருந்தும். இப்போது பச்சை மிளகாயின் சில பக்க விளைவுகளைக் காண்போம்.
  • பச்சை மிளகாயில் உள்ள எரிச்சல் ப்ளேவர்கள், தீவிரமான நெஞ்செரிச்சலை உண்டாக்கும் திறன் கொண்டவை. அதோடு பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்குவதோடு, உடலினுள் அழற்சி/காயங்களையும் உண்டாக்கும்.
  • பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால், அது சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வலிமிக்க வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும். நீங்கள் பச்சை மிளகாயால் செரிமான பிரச்சனையை சந்தித்து, தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்த உணவை உண்ணும் போது, அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
  • பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இந்த கேப்சைசின் அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், அது சரும அழற்சியை உண்டாக்கும். எனவே பச்சை மிளகாயை அளவாக சாப்பிடுங்கள்.
ஆசிரியர் - Editor II