பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரியுடன் போஸ் கொடுத்த இரண்டு போட்டியாளர்கள்- செம வைரல்..!

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரியுடன் போஸ் கொடுத்த இரண்டு போட்டியாளர்கள்- செம வைரல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

மேலும் கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ்.

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.

அத்தோடு அடுத்ததாக ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிலும் அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் விரும்பிய போட்டியாளரான ஆரியுடன் மிகவும் விரும்பப்பட் அந்த இரண்டு போட்டியாளர்களான சனம் மற்றும் அனிதா ஆகியோர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சனம் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


ஆசிரியர் - Editor II