இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது நேர்ந்த அசம்பாவிதம்..!

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது நேர்ந்த அசம்பாவிதம்..!

இறந்தவர் உடலை நோய் காவு வாண்டியில் எடுத்துச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-மேற்கு வங்காள மாநிலத்தின் அசன்சோல் என்ற பகுதியை சேர்ந்தவர் வினித் சிங். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தநிலையில் இவரது உடலை அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் என்ற இடத்திற்கு உறவினர்கள் நோய் காவு வாண்டி மூலம் எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அப்போது இவர்கள் சென்ற வாகனம் உத்தர பிரதேசம் மாநிலம் கோபிகஞ்ச் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த வினித் சிங்கின் உறவினர்கள் நான்கு பேர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்தோடு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர். வட மாநிலங்களில் தற்போது அதிக பனிமூட்டம் இருப்பதால், பனி மூட்டம் காரணமாக எதிரே வந்த வாகனம் தெரியாமல் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது, மேலும் 5 பேர் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II