26 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை!

26 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை!

26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம் ஆர்டிஸ்ட் ஏஜென்சி அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சாங் யூ ஜங்கின் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

தென் கொரியாவை சேர்ந்த பிரபல டிவி நடிகை சாங் யூ ஜங் கடந்த சனிக்கிழமை சியோலில் காலமானார். அவருக்கு வயது 26. கோல்டன் ரெயின்போ எனும் தொடரின் மூலம் பிரபலமான சாங் யூ ஜங் 1994ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தென் கொரியாவில் பிறந்தார். மேக் யுவர் விஷ், ஸ்கூல் 2017 உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

டிவி நடிகை சாங் யூ ஜங் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார் என்றும், திங்கட்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அவரது ஏஜென்சியான சப்லைம் ஆர்டிஸ்ட் ஏஜென்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இளம் வயது நடிகர்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வது, மர்மான முறையில் மரணிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே போகிறது. அதீத புகழ் அடையும் போது, ஏகப்பட்ட பிரச்சனைகளையும் பிரபலங்களை துரத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்திற்கான காரணத்தையே வெளியிடாமல் அவசர அவசரமாக அடக்கம் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தென் கொரியாவில் திரையுலகை சேர்ந்த ஏகப்பட்ட இளம் நடிகர்கள், நடிகைகள், இசைக் கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணித்து வருவது தென் கொரிய சினிமா உலகையே ஆட்டி படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஓ இன் ஐ எனும் 36 வயது நடிகை தற்கொலை செய்து இறந்தார். பாப் சிங்கரான யோஹான் 28 வயதில் மர்மமான முறையில் இறந்தார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆசிரியர் - Editor II