9 நாடுகளுக்கு 6 மில்லயன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை கொடுத்து உதவிய இந்தியா! வெளியான முக்கிய தகவல்

9 நாடுகளுக்கு 6 மில்லயன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை கொடுத்து உதவிய இந்தியா! வெளியான முக்கிய தகவல்

இந்திய அரசாங்கம் முதல்கட்டமாக 6 மில்லியனுக்கும் அதிகமான டோஸை 9 நாடுகளுக்கு மானிய உதவியாக அனுப்பியுள்ளதாக்க ஐ.நா சபைக்கு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டின் Covishield மற்றும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக்கின் Covaxin ஆகிய 2 தடுப்பூசிகள் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது.

முதல் 6 மாதங்களில் 300 மில்லியன் குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியா பல அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும், மானிய உதவியாகவும் தடுப்பூசிகளை கொடுத்து உதவிவருகிறது,

நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், சீஷெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் ஏற்கெனெவே இந்தியாவின் ‘Neighbourhood First’ கொள்கையின்படி மானிய உதவியின் கீழ் கோவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுள்ளன.

அதேபோல் பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு தலா 2 மில்லியன் டோஸ்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தது.

உலக சுகாதார அமைப்பின் ‘Covax Facility’ எனும் திட்டத்திற்கும் இந்தியா கொரோனா தடுப்புமருந்துகளை அனுப்பவுள்ளது.

‘Covax Facility’ என்பது வருமான அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து நாடுகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு விரைவான மற்றும் பக்கச்சார்பற்ற அணுகலை உறுதி செய்வதற்கான உலகளாவிய முன்முயற்சி ஆகும்.

மேலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அவசர சுகாதார மற்றும் மருத்துவ பொருட்கள் மூலம் உதவி செய்துள்ளது.

ஆசிரியர் - Editor II