இந்திய மீனவர்களின் மரணத்தைக் கண்டித்து யாழில் ஒன்றுதிரண்ட கடற்தொழிலாளர்கள்..!

இந்திய மீனவர்களின் மரணத்தைக் கண்டித்து யாழில் ஒன்றுதிரண்ட கடற்தொழிலாளர்கள்..!

கோட்டைபட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களையும் விசைப்படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் , மெர்சியா ஆகிய நான்கு மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் உயிரிழந்தனர்.

அத்தோடு இறந்தவரின் உடலை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினரிடம் உடல்களை ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அதேபோல் இலங்கையில் நடைபெற்று வரும் மீனவர்கள் விசாரணைக்குழு விசாரணை ஆணையத்தை கலைத்துவிட்டு இந்தியாவில் விசாரணை ஆணையம் அமைத்து உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தாமல் மீறி வரும் இலங்கை அரசை கண்டித்தும்,இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்யக் கோரி மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்; நடத்தி வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் தலைமையில் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II