கண் பார்வை மங்கிவிட்டதா?

கண் பார்வை மங்கிவிட்டதா?

இக்காலகட்டத்தில் கண் தொடர்பான பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர்.

வயதானாலும் கண்களில் பிரச்சனை உண்டாகும், கண் பார்வை மங்குதல், பூ விழுதல் எனதொடங்கி சிலருக்கு கண் பார்வையே தெரியாமல் போகும் நிலை உண்டாகலாம்.

இதற்கெல்லாம் தீர்வாகிறது குங்குமப்பூ, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் ஏராளமான நன்மைகளை தருகின்றன.

குங்குமப்பூவை சாப்பிட்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம், மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு நிவாரணம் தருகிறது.

தற்போது கண் பார்வை தெளிவடைய குங்குமப் பூ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குங்குமப்பூ தண்ணீர்

7-8 குங்குமப்பூக்களை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும், 10 நிமிடங்கள் கழித்து இறங்கி சூடு ஆறியதும் காலை, மாலை என இரண்டு வேளை பருகினால் கண் பார்வை தெளிவடையும்.

குங்குமப்பூ டீ

சூடான பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து அருந்தலாம்.

சாலட்டுடன் குங்குமப்பூ

சாலட் சாப்பிடும் போது சிறிதளவு குங்குமப்பூவை அதில் தூவி சாப்பிடலாம்.

ஆசிரியர் - Shabesh