கோபா டெல் ரே: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி!

கோபா டெல் ரே: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி!

ஸ்பெயினில் நடைபெறும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் ரவுண்ட்-16 போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது.

வலேகாஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணியும் ரேயோ வாலிகானோ அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பார்சிலோனா அணி சார்பில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 69ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ப்ரென்கீ டி ஜோங் 80ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

மேலும், ரேயோ வாலிகானோ அணி சார்பில், ப்ரென் கார்ஸியா 63ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆசிரியர் - Editor II