ஐ.சி.சி.யின் மாதத்துக்கான சிறந்த வீரர்- வீராங்கனைகளுக்கான விருது அறிமுகம்!

ஐ.சி.சி.யின் மாதத்துக்கான சிறந்த வீரர்- வீராங்கனைகளுக்கான விருது அறிமுகம்!

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.), மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதினை வழங்கி கௌரவிக்கவுள்ளது.

ஐ.சி.சி. ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. சில வீரர்கள் ஒரு மாதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இப்படிபட்ட நிலையில் ஐசிசி-யின் சிறந்த வீரர்கள் தேர்வு பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மாதந்தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை என்பதை இரசிர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஊடகவியாளர்கள் அடங்கிய ஒரு சுயாதீனமான ஐ.சி.சி வாக்களிப்பு அகாடமி, இரசிகர்களுடன் ஐ.சி.சி ஆண்கள் மாத வீரர் மற்றும் மாதத்தின் ஐ.சி.சி மகளிர் வீரருக்கு வாக்களிக்கும்.

தொடக்க மாதத்துக்கான போட்டியில், இந்தியாவின் முகமது சிராஜ், வொஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், ரிஷாப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ், இங்கிலாந்தின் ஜோ ரூட், அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர்.

மகளிர் வீராங்கனைகளுக்கான போட்டியில், தென்னாபிரிக்காவின் மரிசேன் காப், நாடின் டி கிளார்க், பாகிஸ்தானின் நிடா தார் ஆகியோர் உள்ளனர்.

ஆசிரியர் - Editor II