கனடாவில் நடந்த கொடுமை; மாமியாரை பாலியல் துன்புறுத்திய மருமகன்!

கனடாவில் நடந்த கொடுமை; மாமியாரை பாலியல் துன்புறுத்திய மருமகன்!

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் மருமகனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகளின் குழந்தைப் பேற்றைப் பார்ப்பதற்காக சென்ற நிலையில் மகளின் கணவரால் இவர் பலதடவைகள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கனடாப் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குறித்த நபரின் மனைவியே கனடாப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது 25 வயதான மூத்த மகணின் முதலாவது குழந்தை பிறப்பிற்காக கடந்த 2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கனடாவுக்கு மகளால் அழைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் கொரோனாவால் அங்கு தொடர்ச்சியாக தங்கியுள்ள தாயாரை மருமகன் பலதடவைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின்படி, இரவு நேரத்தில் தாயார் துாக்கத்தில் இருக்கும் போது தனது கணவர் அவரை துன்புறுத்தியதாகவும் அதனை தான் நேரடியாக கண்ணுற்றதாகவும் அவர் பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.

மனைவியின் உறவுகள் இதனை மூடிமறைத்து பொலிசாருக்கு முறையிட வேண்டாம் என தடுத்த போதும் மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மருமகனின் சகோதரிகள் இருவர் நேற்று முன்தினம் உரும்பிராயில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று கலகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II