தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடர்: முன்னணி வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடர்: முன்னணி வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்த அணியில், முன்னணி வீரர்களான ஃபக்கர் சமான், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், சதாப் கான், இமாத் வாசிம் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

முகமது அக்ரம் தலைமையிலான தேர்வுக் குழு நான்கு அறிமுக வீரர்களை பெயரிட்டுள்ளது: இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் கோஹர், பந்துவீச்சு சகலதுறை வீரர் அமத் பட், சகலதுறை வீரர டேனிஷ் அஸீஸ் மற்றும் லெக்ஸ்பின்னர் சாஹித் மெஹ்மூத் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்.

பாபர் அசாம் தலைமையிலான அணியில், ஆமிர் யாமின், அமத் பட், அஷிப் அலி, டேனிஷ் அஸீஸ். பாஷிம் அஸ்ரப், ஹய்டர் அலி, ஹரிஸ் ரவூப். ஹசன் அலி, ஹொசைன் தாலத், இப்தீகார் அஹமட், குஷ்தீல் ஷா, ஹொமட் ஹஸ்னெய்ன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், சப்ராஸ் அஹமட், ஷாயின் அப்ரிடி, உஸ்மான் காதீர், சாபர் கோஹர், சாஹித் மெஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்கா அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் - Editor II