கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா மரணம்!

கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா மரணம்!

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இதுவரை கனடாவில் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 74 ஆயிரத்து 722 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு இலட்சத்து 924 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, மொத்தமாக இதுவரை இரண்டு கோடியே 19 இலட்சத்து 73 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்பது இலட்சத்து 52 ஆயிரத்து 212 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, விடுமுறை நாட்களில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான சுகாதார நடவடிக்கைகளைத் தளர்த்துவதால் ஏற்படும் தீவிரம் குறித்து நாட்டின் உயர்மட்ட மருத்துவரின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஆசிரியர் - Editor II