கனடாவில் இலங்கைத் தமிழர் திடீர் கைது!

கனடாவில் இலங்கைத் தமிழர் திடீர் கைது!

கனடாவின் விட்பி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான (33) வயது உடையவர் மீது சிறுவர் தகாத குற்றச்சாட்டுகளை டர்ஹாம் போலீசார் சுமத்தியுள்ளனர்.

ஸ்னாப்சாட் பயன்பாட்டில் சட்டவிரோத படங்கள் பதிவேற்றப்படுவது குறித்து ஒக்டோபரில் கனடாவின் தேசிய சிறுவர் பாதுகாப்பு மையத்திலிருந்து போலீசாருக்கு ஒரு குறிப்பு கிடைத்தது.

விசாரணையில் விட்பியைச் சேர்ந்த (33) வயது உடையவர் கைது செய்யப்பட்டார்.

அவரது பல மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சாதனங்களின் தடயவியல் பகுப்பாய்விற்குப் பிறகு, அடையாளம் காணப்படாத பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் 2020 ஆம் ஆண்டில் ஸ்னாப்சாட், டிக்ரொக், ஒமேகிள், லைக் மற்றும் கிக் மெசஞ்சர் உள்ளிட்ட பல ஒன்லைன் பயன்பாடுகளைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். டர்ட்போய், டர்டிபோய், டாடி டர்ட்டி, வைரஸ் ரெட் பீஸ்ட் மற்றும் ராக் ஷான் ராக் உள்ளிட்ட திரைப் பெயர்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் செயற்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் ஒன்லைனில் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு பொலிசார் கேட்டுள்ளார்கள்.

சிறுவர்களை தகாத முறையில் வைத்திருத்தல், சிறுவர்கள் மீது தகாத அணுகுவது மற்றும் சிறுவர்களை தகாத முறையில் பயன்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளமாறு டர்ஹாம் பொலிசார் கேட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II