காது வலியால் துடிதுடித்த சிறுவன்.. உள்ளே இருந்ததை கண்டு வியந்துபோன மருத்துவர்கள்!

காது வலியால் துடிதுடித்த சிறுவன்.. உள்ளே இருந்ததை கண்டு வியந்துபோன மருத்துவர்கள்!

லண்டனில் காதுவலியால் துடிதுடித்து வந்த 3 வயது சிறுவனின் காதுக்குள் மருத்துவர்கள் சோதனை செய்தபோது சிறுவனின் காதுக்குள் பல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

லண்டனில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு அதீத காது வலியுடன் சிறுவன் ஒருவனை அழைத்து வரப்பட்டுள்ளான்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் காது துவாரத்தின் வழியே தீவிர பரிசோதனை செய்துள்ளனர்.

சிறுவனின் காதில் என்ன வலி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக காது துவாரத்தின் வழியே பரிசோதனை செய்து பார்த்துபோது நம்ப முடியாத வகையில் சிறுவனின் காதுக்குள் பல் இருந்துள்ள சம்பவம் அங்கு கூடியிருந்த மருத்துவர்களை அதிரவைத்தது.

இந்த சம்பவத்தால் சற்று மிரட்சியான மருத்துவர்கள் பின்னர் தீவிர சிகிச்சைக்குப்பின் சிறுவனின் காதில் இருந்த அந்த பல்லை வெற்றிகரமாக அகற்றினர். மேலும், எப்படி இப்படி நடந்தது என சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II