மொபைல் போன் 100 சதவீதம் சார்ஜ் ஏறினால் pin ஐ கழட்டக்கூடாது... காரணம் என்ன தெரியுமா?

மொபைல் போன் 100 சதவீதம் சார்ஜ் ஏறினால் pin ஐ கழட்டக்கூடாது... காரணம் என்ன தெரியுமா?

சமீப நாட்களாக சார்ஜ் போடப்படும் மொபைல் போன்கள் அதிகளவில் வெடிக்கின்றன என்ற செய்திகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சார்ஜ் செய்யப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களுமே வெடித்து விடாது. இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மொபைல் போன்களை எவ்வாறு சார்ஜ் செய்யலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய நேரத்திற்குள் சார்ஜ் செய்யப்பட வேண்டும் மற்றும் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளை நாம் பெற முடியும் என்று கூறியுள்ளது.

அதாவது "நீங்கள் 10% அல்லது 20% வரை மட்டுமே சார்ஜ் செய்திருந்தால் கூட பரவாயில்லை, அது ஒரு விஷயமல்ல. இதுபோன்ற பாரபட்சமான சார்ஜ், ஒரு ஸ்மார்ட்போனை எந்தவிதத்திலும் பாதிக்காது, எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது".

மேலும், "உங்கள் பேட்டரியின் வாழ்நாளை நீடிக்க விரும்பினால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள 15 சதவிகிதம் என்கிற சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம். ஒரு 65% மற்றும் 75% என்பதற்கு இடையே சார்ஜ் புள்ளியை வைக்க முயற்சி செய்யுங்கள்" என்றும் பேட்டரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

10 முறை 10-10% சார்ஜ் செய்தால் கூட பரவாயில்லை ஆனால் ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். முடிந்த அளவு 95% என்கிற புள்ளியில் நிறுத்திக்கொள்ளவும். ஏனெனில், இன்றைய நவீன லித்தியம்-அயன் பேட்டரிகள் "முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை, அது தேவையானதும் இல்லை".

மேலும் வெளியான வலைத்தள அறிக்கையின்படி, ":அதிக அளவிலான வோல்டேஜ் பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். ஆக அதிக நேரத்திற்கு சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளது. ஒருவேளை, 100% சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜரை அவசர அவசரமாக கழட்ட வேண்டியதில்லை என்றும் பரிந்துரைக்கிறது.

ஏனெனில் நம்மில் பலருக்கு, 100% சார்ஜ் ஆன பின்னரும் கூட சார்ஜரை கழட்டவில்லை என்றால் பேட்டரி பாழாகும் அல்லது வெடிக்கும் என்கிற அச்சம் உள்ளது. அது தேவையில்லாத ஒரு அச்சமாகும். முடிந்த வரை 95% க்குள் கழட்ட பாருங்கள். ஒருவேளை 100% ஐ எட்டிவிட்டால் பரவாயில்லை, 100% சார்ஜ் ஆனதும் தானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.

ஆசிரியர் - Editor II