சுவிஸில் பயங்கரம்! கார் பார்க்கிங்கில் மொடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம்

சுவிஸில் பயங்கரம்! கார் பார்க்கிங்கில் மொடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம்

சுவிட்சர்லாந்தில் 24 வயதான மொடல் அழகி மீது அமிலம் வீச்சி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Neuchâtel நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 2016 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த அழிகிப்போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்று வரை சென்றவர் என தெரியவந்துள்ளது.

மொடல் அழிகி கார் பார்க்கிங்கில் இருந்த போது மர்ம நபர் ஒருவன் அவர் மீது அமிலத்தை ஸ்ப்ரே அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

சம்பவயிடத்தில் இருந்த ஒருவர் உடனே பெண் மீது தண்ணீர் ஊற்றி உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கு மோசமான பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமிலம் வீச்சு தாக்குதலை தொடர்ந்து பெண் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து Vaud-ல் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த 3 மணிநேரத்திற்கு பின் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் வசித்து வரும் 19 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் 19 வயது இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது இதுவரை தெரியவில்லை.

விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், ஆதாரங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் - Editor II