கனடா கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞன் ஒருவர் கைது!

கனடா கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞன் ஒருவர் கைது!

கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 3 பேரை பொலிசார் கை செய்துள்ளனர். அதில் ஒருவர் தமிழ் இளைஞனாவார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஏகே 47 துப்பாக்கியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பெப்ரவரி 8ஆம் திகதி மைக்கேல் ஓபோங் பெர்ச்சி (23) என்ற இளைஞன் சேஜ் அவென்யூ (கலிடோனியா சாலையின் கிழக்கு) அருகே லோரன்ஸ் அவென்யூவில் ஒரு காரில் இருந்தபோது, இரவு 9:47 மணிக்கு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்தார்.

அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்திருந்தார்.

இந்த ஆண்டில் நகரத்தில் நடந்த எட்டாவது கொலை இது.

இது குறித்து விசாரித்த ரொரன்ரோ பொலிசார் 3 இளைஞர்களையும், ஒரு யுவதியையும் கைது செய்தனர். கெவன் ஷெமர் ஃபூ (24) டே ஜுவான் பிரான்சிஸ் (21) யசந்தன் கந்தையா (21), ஜெசிகா மேடலின் ராய் (20) ஆகியோரே கைதாகினர்.

ஆசிரியர் - Editor II