இப்படி விக்கெட் விழுந்தா என்ன பண்ண முடியும்? கோஹ்லி வேதனை

இப்படி விக்கெட் விழுந்தா என்ன பண்ண முடியும்? கோஹ்லி வேதனை

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததே அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி, முதல் ஆறு ஓவர்களில் 30 ஓட்டங்கள் எடுக்காமல் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்ததே அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.

எப்படியும் நாங்கள் 145 ஓட்டங்கள் எடுப்போம் அதுவே போதும் என்று நினைத்தோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களின் சிறப்பான, துல்லியமான பந்துவீச்சு எங்களுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்தது. பவர்ப்ளே ஓவர்கள் மிக மோசமாக அமைந்துவிட்டது, இதுவே தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

குல்தீப், உமேஷ் யாதவ், சஹால் போன்றோர் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசினார்.

ஆனால் அவரால் கடைசி கட்டத்தில் வெற்றியை தேடித் தர முடியவில்லை தவறுகளை சரிசெய்து கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்

ஆசிரியர் - Editor II