உத்தரகாண்ட் பனிச்சரிவு : காணாமல்போன அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க அரசு திட்டம்!

உத்தரகாண்ட் பனிச்சரிவு : காணாமல்போன அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க அரசு திட்டம்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பனிச்சிதறல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல்போன 136 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து அறிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் பனிச்சரிவில், காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை எழுபது பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சில உறுப்புகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 136 பேரை குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளது.

பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு தகவலற்று போனால்தான் இறந்துவிட்டதாக கருதப்படுவது வழக்கம். ஆனால் உத்தரகாண்ட் விபத்தைப் பொருத்தவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II