மகனுக்காக விஜய் முதல் முறையாக எடுக்கப்போகும் மிகப்பெரிய ரிஸ்க்.. கப்பல் கரை சேருமா?

மகனுக்காக விஜய் முதல் முறையாக எடுக்கப்போகும் மிகப்பெரிய ரிஸ்க்.. கப்பல் கரை சேருமா?

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் அறிமுகப் படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் விக்ரம் தன்னுடைய மகனை ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி, அருண்விஜய் போன்றோர் அடுத்தடுத்து தங்களது படங்களில் தன்னுடைய வாரிசுகளை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் தன்னுடைய மகன் சஞ்சய்யை அறிமுகப்படுத்தினார். தற்போது விஜய் தன்னுடைய மகன் சஞ்சய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்க பெரிய பிளான் ஒன்றை போட்டு வருகிறாராம். இது சக்சஸானால் தொடர்ந்து தன்னுடைய படங்களையும் சொந்தமாக தயாரிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.

விஜய் தன்னுடைய மகனை விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்த போவது உறுதியான செய்தி தான். ஆனால் அது எந்த மாதிரியான படமாக இருக்க வேண்டும் என தளபதி விஜய் நீண்ட நாட்களாக யோசனை செய்து வருகிறாராம்.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உப்பண்ணா படத்தை சமீபத்தில் விஜய் பார்த்தாராம். அந்த படம் விஜய்யை மிகவும் கவர்ந்து விட்டதால் இந்த படம்தான் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்த சரியான படமாக இருக்கும் என முடிவு செய்துள்ளாராம்.

மேலும் அந்த படத்தை சொந்தமாகவே தயாரிக்கலாம் எனவும் யோசித்து வருகிறாராம் விஜய். விஜய்யைப் போலவே தற்போது விஜய்யின் மகனை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.


ஆனால் விஜய், மற்றவர்களை நம்பி சொதப்பாமல் சொந்த ரிஸ்க் எடுப்பது மேல் என முடிவு செய்து தற்போது உப்பண்ணா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி அதில் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்து அதற்கு சரியான இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம். விஜய்யின் தயாரிப்பு கப்பல் கரை சேருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர் - Editor II