ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து அரங்கேறிய சமையல்... காணொளியால் அதிர்ச்சியில் மக்கள்

உத்திர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் ஒருவர் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சமைக்க வந்த சோஹைல் என்ற நபர் தந்தூரி ரொட்டி செய்யும் போது தனது எச்சிலை அதன் மீது உமிழ்ந்துள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ வைரலான நிலையில் இளைஞன் மீது பொலிசார் வழக்கு பதிந்து சமையல்காரரை கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II