இந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்

இந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்

ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

இவ் வருடமும் புதிய ஐபோன்கள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.

இந்நிலையில் புதிய ஐபோன்கள் தொடர்பான தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

இதன்படி வழமைக்கு மாறாக இம் முறை மேலும் சில வர்ணங்களில் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் நீலம், ஆரேஞ்சு மற்றும் கோல்ட் கலர் என்பன இடம்பிடித்துள்ளன.

வழமையாக கறுப்பு, நரை நிறம் மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட ஐபோன்களே அதிக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Shabesh