நோக்கிய அறிமுகம் செய்யவுள்ள X5

நோக்கிய அறிமுகம் செய்யவுள்ள X5

இம் மாதம் 11ம் திகதி அளவில் நோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு புதிய அன்ரோய்ட் கைப்பேசியான Nokia X5 இனை வெளியிடவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 5.86 அங்குல அளவு, 1520 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது 2GHz Octa Core Helio P23 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் பிரதான நினைவகம் 4GB அல்லது 6GB RAM தரப்பட்டுள்ளதுடன், 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

மேலும் Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் நீடித்து உழைக்கக்கூடிய 3,000mAh மின்கலமும் காணப்படுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Shabesh