பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன்..எங்கு தெரியுமா ??

பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன்..எங்கு தெரியுமா ??

அமெரிக்காவில் சிறையிலிருந்து விடுதலையான கைதி, தனது பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்து, பின்னர் தனது உறவுக்காரரையும் அவரது 4 வயது பேத்தியையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் 42 வயதான Lawrence Paul Anderson, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் போதைபொருள் கடத்தல், பள்ளியில் போதைபொருள் வியாபாரம் செய்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக துப்பாக்கியை கையாளுதல் என பல வழக்குகளில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம், தணடனைக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், Minnesota பகுதியில் உள்ள Chickasha நகரத்தில் தனது உறவுக்காரரான Delsie Pye மற்றும் அவரது கணவன் Leon Pye-யின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9-ஆம் திகதி, பக்கத்து வீட்டில் வசித்து வந்த Andrea Lynn Blankenship எனும் 41வயதான பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது இதயத்தை வெட்டி எடுத்து வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் அதை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது உறவினர்களுக்கு வலுக்கட்டாயமாக சாப்பிட கொடுத்துள்ளார்.

பின்னர், Delsie Pye, Leon Pye மற்றும் அவர்களது வீட்டுக்கு வந்திருந்த Pye-யின் 4 வயது பேத்தியையும் கத்தியால் குத்தியள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே Leon Pye (67) மற்றும் குழந்தை இறந்துவிட்டனர். Delsie Pye இரண்டு கண்களிலும் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு போராடியுள்ளார்.

பின்னர் வீட்டையே நாசப்படுத்தி கொண்டிருந்த Anderson-ஐ அங்கு வந்த பொலிஸார் அடித்து கைது செய்தனர்.

பின்னர் காயங்களுக்காக சிகிச்சையளிக்க மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மூன்று கொலைகளையும் Anderson ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் மீது வழக்குப்பதிவு செயதல்ல பொலிஸ், Anderson சம்பவம் நடந்தபோது போதை பொருளை பயன்படுத்தியுள்ளாரா என சோதனை செய்யவுள்ளனர்.

அமெரிக்காவில் நடந்துள்ள இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவம் உலகம் முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II