காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு!

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு!

சென்னையை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர், லோகேசினி என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர்கள் திடீரென முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், விசாரணையில் முருகனின் மனைவியே தனது திருமணம் மீறிய உறவுக்கு கணவன் இடையூறாக இருப்பதாகக் கூறி, காதலன் சண்முகநாதன் என்பவரின் உதவியுடன் கூலிப்படைகளை ஏவி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

ஆசிரியர் - Editor II