பள்ளிக்கு சென்று திரும்பி வராத 12ம் வகுப்பு மாணவி... பெற்றோர்கள் கண்ட பேரதிர்ச்சி

பள்ளிக்கு சென்று திரும்பி வராத 12ம் வகுப்பு மாணவி... பெற்றோர்கள் கண்ட பேரதிர்ச்சி

ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 22-ஆம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் பள்ளி முடிந்து ஆங்கில வகுப்புக்கு சென்றுவருவது வழக்கம்.

ஆனால் சம்பவத்தன்று நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிய உறவினர்கள், இறுதியில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, வழியில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அந்த சிறுமியை நடுவில் அமர வைத்து அவரின் தலையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு செல்வதை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து தனது மகளை மீட்டு பின்னர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். விசாரணையில், சம்பவத்தன்று மாணவி தனது நெருங்கிய தோழியின் வீட்டுக்கு சென்றதும் அங்கு மயங்கி விழுந்ததும் தெரியவந்துள்ளது.

அப்போது தோழியின் உறவினரான நபர் ஒருவர், அந்த பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளின் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து 4 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II